திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அரவிந்தன் - கவிதா தம்பதியரின் மகள் ஹர்ஷினி (15). இவர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்ற பள்ளி அளவிலான செஸ் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் கலந்துகொண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
9 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டியில் ஹர்ஷினி 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். ரஷ்யாவின் ஸ்ட்ராக் நோவா கரீனா 6.5 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார்.
இந்த வெற்றி குறித்து ஹர்ஷினி கூறும்போது, “நான் 2-ம் வகுப்பு முதல் செஸ் விளையாடி வருகிறேன். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த ஆர்.பி.ரமேஷ் என்பவரிடம் பயிற்சி பெற்றுவருகிறேன். எதிர்காலத்தில் சர்வதேச மாஸ்டர் மற்றும் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதே லட்சியம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago