தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அல் ரய்யானில் உள்ள எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, 2018-ம் ஆண்டு 2-வது இடம் பிடித்த குரோஷியாவுடன் மோதுகிறது.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நெய்மரால் பிரேசில் அணியின் உற்சாகம் அதிகரித்துள்ளது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. கண்கவரும் வகையில் அமைந்த இந்த ஆட்டத்தில் வினிசியஸ் ஜூனியர், ரிச்சர்லிசன், லூகாஸ் பகுயிடா, நெய்மர் ஆகியோர் கோல் அடித்து இதர அணிகளுக்கு அச்சுறுத்தல் செய்தியை அனுப்பினர்.
தென் கொரியாவுக்கு எதிராக முதல் 45 நிமிடங்களை பிரேசில் அணி வீரர்கள் மிகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து விளையாடினார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் கோல்அடித்த போது உற்சாக நடனமாடினர். 61 வயதான பயிற்சியாளரான டைட்டும் வீரர்களுடன் இணைந்து நடனமாடியது அனைவரையும் ஈர்த்தது.
பிரேசில் அணியின் செயல்திறன் சிலபகுதிகளில் மிகச் சிறந்த மற்றும் மிகவும் பொழுதுபோக்குடன் செயல்பட்ட 1970-ம் ஆண்டு பீலே தலைமையிலான அணி முதல் 1982-ல் சாக்ரடீஸ் தலைமையிலான பிரேசில் அணி வரை ஒப்பிட்டுப்பார்க்க வைத்தது. நெய்மர், டேனிலோ வருகை பிரேசில் அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.
» FIFA WC 2022 | உலகக் கோப்பையை எந்த அணி வென்றாலும் அது சகாப்தமாக இருக்கும்: எப்படி?
» கிரிக்கெட் போட்டியில் பந்தை பிடிக்கும்போது பற்களை பறிகொடுத்த கருணரத்னே
5 முறை சாம்பியனான பிரேசில் இம்முறை லீக் சுற்றில் 3 கோல்கள் மட்டுமே அடித்தது. அதிலும் கேமரூனுக்கு எதிராக தோல்வி அடைந்தது. 1998-ம்ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர்லீக் சுற்றில் பிரேசில் அணி அடைந்தமுதல் தோல்வியாக இது அமைந்திருந்தது. சமீபத்திய உலகக் கோப்பை ஆட்டங்களின் முடிவுகளை கவனத்தில் கொண்டு பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் கவனமுடன் செயல்பட முயற்சிக்கும்.
கடைசியாக 2002-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியானது அதன் பின்னர் நடைபெற்ற உலகக் கோப்பைகளில் ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளிடம் வீழ்ந்துள்ளது. 2014-ல் சொந்த மண்ணில் நடைபெற்றஉலகக் கோப்பையில் ஜெர்மனியிடம் 1-7 என்ற கோல் கணக்கில் அவமானகரமான வகையில் தோல்வியை சந்தித்தபிரேசில் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பெல்ஜியத்திடம் வீழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கத்தார் உலகக் கோப்பையில் குரோஷியா அணி 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் வெற்றி பெற்றது. லீக் சுற்றில் கனடாவுக்கு எதிராக 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா அணி மொராக்கோ, பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டங்களை கோல்களின்றி டிரா செய்தது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானை பெனால்டி ஷூட் அவுட்டில் வென்றிருந்தது.
இது 2018-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷியா அணியின் செயல் திறனில் இருந்து முற்றிலும்மாறுபட்டதாக உள்ளது. எனினும் 37 வயதான லூகா மோட்ரிச் தலைமையிலான குரோஷியா அணி ஏதேனும் மாயங்கள் நிகழ்த்தக்கூடும் என அந்நாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிரேசில் – குரோஷியா அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பிரேசில் 3 வெற்றியையும், ஒரு டிராவையும் பதிவு செய்துள்ளது. உலகக் கோப்பையில் 2006-ம் ஆண்டு தொடரில் 1-0 என்ற கோல் கணக்கிலும், 2014-ல் 3-1 என்ற கோல் கணக்கிலும் குரோஷியாவை வென்றுள்ளது பிரேசில் அணி.
நெய்மரின் 2 கோல்கள்…: கத்தார் உலகக் கோப்பையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள பிரேசிலின் நெய்மர், நாக் அவுட் சுற்றில் தென் கொரியாவுக்கு எதிராக கோல் அடித்திருந்தார். 2014-ம் ஆண்டு தொடரில் லீக் சுற்றில் குரோஷியாவுக்கு எதிராக நெய்மர் இரு கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். மீண்டும் அவர் அசத்தக்கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
> உலகக் கோப்பையில் குரோஷியா 3 முறை பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி கண்டுள்ளது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டென்மார்க், ரஷ்யா அணிகளை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய குரோஷியா இம்முறை ஜப்பான் அணியை அதே பாணியில் தோற்கடித்து இருந்தது.
> உலகக் கோப்பை கால்பந்தில் பிரேசில் அணி தொடர்ச்சியாக 8-வது முறையாக கால் இறுதி சுற்றில் விளையாடுகிறது. இதில் 1994 மற்றும் 2002-ல் சாம்பியன் பட்டம் வென்றது. 1998-ல் 2-வது இடம் பிடித்தது. 2014-ல் அரை இறுதியில் ஜெர்மனியிடம் 1-7 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்திருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago