நவீன பேட்ஸ்மென்களில் கோலி, ஸ்மித், ரூட், வில்லியம்சன் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் விராட் கோலியிடமிருந்து பேட்டிங் பாடம் கற்றுக் கொள்ள ஆவலாக இருப்பதாக இங்கிலாந்தின் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் விராட் கோலி 101.25 என்ற சராசரியுடன் 405 ரன்களை எடுக்க ஜோ ரூட் 49.83 என்ற சராசரியில் 299 ரன்களை எடுத்துள்ளார்.
ஆனால் 2016-ல் 3 வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்ததில் ஜோ ரூட் 33 ரன்கள் விராட் கோலியை காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஜோ ரூட் ஸ்கை ஸ்போர்ட்ஸிற்குக் கூறியதாவது:
என்னையும் கோலியையும் ஒப்பிடுவது சிறிது காலத்திற்கு, குறைந்தது 6 மாத காலத்திற்கு நடக்கவே செய்யும். ஆனால் கோலி ஆடுவதைப் பார்க்கும் போது இந்தப் பிட்ச்களில் அது ஒரு பாடமாக நான் வரிந்து கொள்ளத் தக்கதாகும்.
இந்தத் தொடரில் அவர் பெரிய அளவில் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் அவர் ரன்கள் எடுக்காத போது நாங்கள் சிலபல விரைவு விக்கெட்டுகளை ‘கொத்தாக’ கைப்பற்ற முடிகிறது. அவரை வீழ்த்திவிட்டால் எங்களுக்கு நிலமைகள் விரைவில் மாறி விடுகிறது.
இதனால் அவருக்கு அதிக அழுத்தம் இருக்கும், இதுவும் அவருக்குத் தெரியும். அவர் எடுத்த ரன்கள் இந்திய அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பு, தொடரை வெற்றி பெற உதவக்கூடியது.
இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago