லுசைல்: சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுக்கல் அணி.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த இப்போட்டியில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக, 21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் அறிமுக வீரராக களம்கண்டார்.
ஆட்டம் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் வசம் இருந்தாலும், அறிமுக வீரர் ராமோஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, போர்ச்சுகல்லின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 17வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கால்பந்து உலகில் ராமோஸ் தனது முத்திரையை பதிவு செய்தார். போர்ச்சுகல்லின் மற்றொரு வீரர் பெப் 33-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 2-0 என சுவிட்சர்லாந்தை காலி செய்தார்.
இரண்டாவது பாதியிலும் தொடர்ந்த போர்ச்சுக்கல்லின் ஆதிக்கத்தில் ராமோஸ் 51-வது நிமிடம் மற்றும் 67-வது நிமிடம் இரண்டு கோல்கள் அடித்து அசரவைத்தார். அதேபோல், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், பேல் லியோ 92-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தாலும் ஆட்ட நேரம் முடிந்தது. இதனால், இறுதியில், போர்ச்சுக்கல் 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
» கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் டெஸ்ட் அணிகளின் வெற்றி விகிதம்: இந்தியாவின் செயல்பாடு எப்படி?
» காலிறுதிக்கு தகுதிபெற்ற ஒரே ஆப்பிரிக்க அணி - பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தியது மொராக்கோ
21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் தனது அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் கோல் அடித்து உலக அரங்கில் அழுத்தமான வருகையை பதிவு செய்துள்ளார். இதையடுத்து சமூக ஊடகங்களில் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். போர்ச்சுக்கல் ரசிகர்கள் அவரை தங்களின் புதிய ஹீரோ என்று வர்ணித்து வருகின்றனர். இதனிடையே, இந்த வெற்றியின் மூலம் காலிறுதியில் மொராக்கோவை எதிர்கொள்ளவுள்ளது போர்ச்சுகல்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago