உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று மொராக்கோ - ஸ்பெயின் அணிகள் இன்று மோதின. எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். அந்த முயற்சிகள் கைகூடவில்லை. ஆட்ட நேர முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.
இதன்பின் வெற்றியை தீர்மானிக்க ஆட்டம் கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரு அணியும் கோல் அடிக்காததையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
வெற்றிக்கு மொராக்கோ கோல்கீப்பர் 31 வயதான யாசின் பவுனோ முக்கிய பங்கு வகித்தார். ஏனென்றால், பெனால்டி ஷூட் அவுட்டில் 3 முறை பெனால்டி கோல்களை தடுத்து வெற்றிக்கு உதவியது அவர்தான். இதனிடையே, நடப்பு உலகக்கோப்பையில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் இரண்டாவது வென்ற அணி மொராக்கோ.
இந்த வெற்றியின் மூலம் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதிபெற்ற ஒரே ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணியாக மொராக்கோ உருவெடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago