FIFA WC 2022 | போட்டிகளை பார்க்காமல் மிஸ் செய்கிறீர்களா?: ஹைலைட்ஸை தொகுத்து வழக்கும் ஃபிஃபா தளம்

By செய்திப்பிரிவு

கத்தார் நாட்டில் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் நாக்-அவுட் சுற்றை எட்டியுள்ளது. தற்போது ரவுண்ட் ஆப் 16 நடைபெற்று வருகிறது. அடுத்ததாக காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த முக்கிய போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மற்றும் நள்ளிரவு 12.30 ஆகிய நேரங்களில் நடைபெறுகிறது. இந்த சூழலில் போட்டியை நேரலையில் பார்க்க முடியாமல் மிஸ் செய்யும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியையும் வெறும் 2 நிமிடங்களில் தொகுத்து விருந்து படைக்கிறது ஃபிஃபா பிளஸ் தளம். இதில் 90 நிமிட போட்டியின் ஹைலைட்ஸ் சுருக்கமாக வழங்கப்படுகிறது.

அதோடு முதல் போட்டியில் தொடங்கி இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கோல்கலையும் ‘பூ மாலை’ போல நேர்த்தியாக ஒன்றன்பின் ஒன்றாக தொகுத்து வழங்கப்படுகிறது. அது பார்க்கவே அற்புதமாக உள்ளது.

ஃபிஃபாவின் இந்த ஏற்பாடு போட்டியை காண தவறும் ரசிகர்களுக்கு பெரிதும் உதவும். முக்கியமாக இந்த வீடியோக்கள் நம்பகத்தன்மை மற்றும் துரிதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஹைலைட்ஸ்களை பார்க்க உதவும் ஃபிஃபா தளத்தின் லிங்க்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE