இங்கிலாந்து அணியை 4-0 என்று வீழ்த்தி கோலி தலைமையில் இன்னொரு டெஸ்ட் தொடர் மகுடம் சூட்டிக்கொண்டது இந்திய அணி. இந்நிலையில் பெருமைக்குரிய அணி இது என்று கோலி மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆட்டம் முடிந்து தொடர் நாயகன் விராட் கோலி கூறியதாவது:
நிச்சயமாக பெருமைக்குரிய அணி. 3-0 என்று தொடரைக் கைப்பற்றிய பிறகு இங்கு வந்து இம்மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி ஈட்டியது அணியின் வலுவான மனநிலைக்கு ஒரு அத்தாட்சியாகும். இது பேட்டிங், பவுலிங், என்று அனைத்திலும் வெளிப்பட்டது.
இளம் வீரர்கள் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தோம் அதனை கே.எல்.ராகுல், கருண் நாயர் பூர்த்தி செய்தனர். அவர்கள் அணியை கொண்டு நிறுத்திய நிலையில் ஒரு அணிதான் வெற்றி பெற முடியும் என்பதாக அமைந்தது. 477 ரன்கள் அடித்த இங்கிலாந்து 282 ரன்கள் முன்னிலையை கொடுத்ததற்கு கருண் நாயர், ராகுல் பங்களிப்பு முக்கியமானது.
இன்று 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் பிறகு சரிவு விரைவில் நடைபெறும் என்றே நினைத்தோம். ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதைப் பார்க்க அருமையாக இருந்தது.
டாஸ்களை தோற்றாலும் 4-0 என்று வெற்றி பெற்றதை வைத்துப் பார்க்கும் போது டாஸ் என்பதை வெற்றி தோல்வி சமன்பாட்டிலிருந்து எடுத்து விட்டோம் என்றே கருதுகிறேன், டாஸ் ஒரு பொருட்டல்ல. பிட்ச்சின் தன்மைகளும் ஒரு பொருட்டல்ல. 477 ரன்களை கொடுத்து விட்டு இன்னிங்ஸ் வெற்றி பெறுவது என்பது அடிக்கடி டெஸ்ட் அரங்கில் நடக்காத ஒன்று.
நாங்கள் ஒவ்வொரு நாளும் கடினமாக பயிற்சி செய்தோம், வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஓய்வறையில் வீரர்களுக்கு பரஸ்பர மரியாதை உள்ளது.
பின்கள வீரர்கள் தனித்துவமான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல வேகத்துடன் சீராக வீசியது என்னைப் பெருமையடையச் செய்துள்ளது. இவ்வாறு கூறினார் கோலி.
இந்திய அணி எங்களைத் தண்டித்தது: அலஸ்டர் குக்
சாக்குபோக்குகளே இல்லை, இந்தியா நிச்சயம் சிறந்த அணி, வெற்றிபெறத் தகுதியான அணி. 5-ம் நாள் பிட்ச், பவுலர்கள் காலடித்தடங்களிலிருந்து பந்துகள் திரும்பின. ஆனால் இப்படி சரியும் அளவுக்கு ஒன்றுமில்லை. முக்கியமான வாய்ப்புகளை தவற விட்டோம் அதற்காக இந்திய அணி எங்களுக்கு தண்டனை அளித்துள்ளது. விராட் கோலிக்குப் பாராட்டுகள்.
எங்களைப் பொறுத்தவரை தவற விட்ட வாய்ப்புகள், நழுவ விட்ட கேட்ச்களுக்கான தொடராக இது அமைந்தது. போதிய ரன்களை அடிக்க முடியவில்லை, போதிய விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. ஓய்வறை மிகக் கடினமாக இருக்கும். இந்தியாவில் ஆடுவது கடினமானதே.
இவ்வாறு கூறினார் இங்கிலாந்து கேப்டன் குக்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago