79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வ.தேசம் தோல்வி; தொடரை வென்றது நியூஸிலாந்து

By இரா.முத்துக்குமார்

நெல்சன், சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் வங்கதேசத்தை நியூஸிலாந்து வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தார். நியூஸிலாந்தின் நீல் புரூம் அதிரடி முறையில் 107 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 109 ரன்களை விளாச 50 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைவரும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 23-வது ஓவரில் 105/1 என்ற நிலையிலிருந்து 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களுக்கு அனைவரும் ஆட்டமிழந்து தோல்வி தழுவி தொடரையும் இழந்தது.

நீல் புரூம் தனது அறிமுகத்திற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து முதல் சதத்தை எடுத்துள்ளார்.

வங்கதேச அணி விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல் சரியவிடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 309 ரன்களை விரட்டிய போது 8 ஓவர்களில் 39 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையிலிருந்து அடுத்த 17 ரன்களுக்கு தங்களது 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி கண்டது.

இன்று 252 ரன்கள் இலக்கை விரட்டிய போது தமிம் இக்பால் 16 ரன்களில் சவுதியிடம் ஆட்டமிழக்க, சபீர் ரஹ்மான் (38), இம்ருல் கயேஸ் (59) இணைந்து 75 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கயேஸுக்கு அவர் 19 ரன்களில் இருந்த போது கொலின் மன்ரோ கேட்சை விட்டார். இம்ருல் கயேஸ் புல் ஷாட்களையும் சபீர் ரஹ்மான் டிரைவ் கட்களையும் சிறப்பாக ஆட 105/1 என்று வெற்றிக்கான அருமையான ஒரு தடத்தில் சென்று கொண்டிருந்தது வங்கதேசம்.

அப்போது சபீர் ரஹ்மான் ரன் அவுட் ஆனார். கயேஸ் கவர் திசையில் தள்ளிவிட்டு ஒரு ரன்னுக்கு ஓடி வந்தார். ஓடி வந்து கொண்டே இருந்தார் மறுமுனையில் ரீச் செய்தார், சபீர் ரஹ்மான் இரட்டை மனநிலையில் ஓட வேண்டாம் என முடிவெடுத்து பிறகு ஓட நினைத்தார் த்ரோ ஸ்ட்ரைக்கர் முனைக்கு வர சபீர் ரன் அவுட்.

இது திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக உலகின் அதிவேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனின் இன்ஸ்விங்கிங் யார்க்கருக்கு மஹமுதுல்லா பவுல்டு ஆனார். ஷாகிப் உல் ஹசன் 7 ரன்களுக்கு வில்லியம்சன் பந்தை கட் செய்து புரூமிடம் கேட்ச் ஆனார். மொசாடக் ஹுசைனும், தன்பிர் ஹெய்தரும் வில்லியம்சனிடம் ஆட்டமிழக்க இடையில் இம்ருல் கயேஸ் 59 ரன்களில் டிம் சவுதியிடம் வீழ்ந்தார். வில்லியம்சன் 3 விக்கெட்டுகளை 22 ரன்களுக்கு கைப்பற்ற வங்கதேசம் 184 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி கண்டது. போல்ட், சவுதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக நியூஸிலாந்து அணியில் மார்டின் கப்தில் ரன் எடுக்காமல் 4-வது பந்தில் மஷ்ரபே மோர்டசாவிடம் எல்.பி.ஆனார். லாதம், வில்லியம்சன் சோபிக்கவில்லை. நீஷம் 28 ரன்களையும் லூக் ரோங்கி 35 ரன்களையும் எடுத்தனர். ஒரு முனையில் புரூம் மட்டுமே சிறப்பாக ஆடி 109 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். வங்கதேச அணியில் மோர்டசா சிறப்பாக வீசி 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகனாக நீல் புரூம் தேர்வு செய்யப்பட்டார், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் வங்கதேசத்திற்கு ஆறுதல் வெற்றிகிட்டுமா என்று பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்