தோகா: நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறி உள்ளது பிரேசில் அணி. குரூப் சுற்றில் இரண்டாவது வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரேசில் உறுதி செய்தது. சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது அந்த அணி.
குரூப் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இரு அணிகளும் களத்தில் பலமாக போட்டி போட்டன. பிரேசில் அணி கோல் போடுவதில் மிகவும் தீவிரமாக இருந்தது. 13 ஷாட்களை ஆடி இருந்தது பிரேசில். அதில் 3 ஷாட்கள் டார்கெட்டில் விழுந்தன.
பிரேசில் அணியின் கேஸ்மிரோ, 83-வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார். அதன் பிறகும் இரண்டாவது கோலை பதிவு செய்ய முயற்சிகளை மேற்கொண்டது பிரேசில் அணி. ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்றது பிரேசில். வரும் 3ம் தேதி கேமரூன் அணியை எதிர்கொள்கிறது பிரேசில்.
அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ள மற்றொரு அணியாக பிரான்ஸ் உள்ளது. போர்ச்சுகல் - உருகுவே அணிகள் இடையிலான போட்டியில் போர்ச்சுகல் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago