அல் ரய்யான்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் விளையாட வந்த கானா அணி வீரர்கள் முரசு கொட்டி, பாட்டு பாடியபடி மைதானத்திற்குள் கூலாக வந்திருந்தனர். அதோடு தென் கொரியாவுக்கு எதிரான போட்டியை 3-2 என்ற கணக்கில் அந்த அணி வென்றுள்ளது.
குரூப் ‘ஹெச்’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் இந்த போட்டியில் விளையாடின. கத்தார் நாட்டில் உள்ள அல் ரய்யான் பகுதியில் அமைந்துள்ள எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. கானா அணிக்காக முதல் பாதியில் முகமது சலீசு மற்றும் முகமது குடுஸ் தலா ஒரு பதிவு செய்தனர். அதற்கு இரண்டாவது பாதியில் பதிலடி கொடுத்தது கொரியா.
இருந்தாலும் ஆட்டத்தில் 68-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் பதிவு செய்தார் குடுஸ். அதன் மூலம் ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த கானா வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்தப் போட்டிக்காக பேருந்தில் வந்த கானா வீரர்கள் மைதானத்தில் தங்கள் வருகையை இசையோடு கனெக்ட் செய்திருந்தனர். அது போட்டி தொடங்குவதற்கு முன்பே உலக அளவில் வைரலானது.
» இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு
» “மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?” - ‘வாரிசு’ ரிலீஸ் சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் விளக்கம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago