FIFA WC 2022 | கத்தாரில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ஒலிக்கும் ரசிகர்களின் குரல்

By செய்திப்பிரிவு

தோகா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். போட்டிகள் நடைபெற்று வரும் மைதானங்களில் சஞ்சு சாம்சன் படம் இடம் பெற்றுள்ள போஸ்டர்களை ரசிகர்கள் தாங்கி நிற்பது கவனம் பெற்றுள்ளது.

28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார் கேரளாவை சேர்ந்த இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ஆனாலும் அணியில் இவருக்கான வாய்ப்பு கிடைத்தாலும் ஆடும் லெவனில் கிடைப்பதில் சவாலாக உள்ளது.

ரசிகர்கள் அது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனாலும் ஆடும் லெவனில் வீரர்களை பேலன்ஸ் செய்ய வேண்டி உள்ள காரணத்தால் அவருக்கான வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருப்பதாக அணியின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் ஆறாவது பவுலர் ஆப்ஷன் காரணமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த சூழலில் ரசிகர்கள் நடப்பு கால்பந்து உலகக் கோப்பை அரங்கில் சஞ்சு சாம்சனுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் பேனர்களை தாங்கி நிற்கின்றனர். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ‘என்றும் உங்களுடன், உங்களுக்கு ஆதரவாக’ என ரசிகர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

விளையாட்டு

36 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்