தோகா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு அல் ஜனூப் மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே ஆஸ்திரேலிய அணி கோல் அடித்து பிரான்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
மேத்யூ லெக்கியிடம் இருந்து பந்தைபெற்ற கிரேய்க் குட்வின் 6 அடி தூரத்தில் இருந்து கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியா 1–0 என முன்னிலை பெற்றது. எனினும் பிரான்ஸ் சோர்ந்துவிடாமல் உயிர்ப்பிப்புடன் செயல்பட்டு முதல் பாதியிலேயே 5 நிமிட இடைவெளியில் இரு கோல்களை அடித்து அசத்தியது. 27–வது நிமிடத்தில் தியோ ஹர்னாண்டஸ் உதைத்தபந்தை கோல்கம்பத்தின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோலாகமாற்றினார் அட்ரியன் ராபியோட்.
32-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் டிபன்டரிடம் இருந்து பந்தை லாவகமாக பறித்த அட்ரியன் ராபியோட் அதை கிளியான் பாப்பேவுக்கு தட்டிவிட்டார். அவர் நெருக்கமான சூழ்நிலையில் ராபியோட்டுக்கு ஃபிளிக் செய்தார். ராபியோட் பந்தை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்த ஆலிவர் கிரவுடுக்கு தட்டிவிட, அவர் கோல் வலைக்குள் திணித்தார். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
68-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி 3-வது கோலை அடித்தது. உஸ்மான் டெம்ப்ளேவிடம் இருந்து பந்தை பெற்ற கிளியான் பாப்பே, ஆஸ்திரேலிய அணியின் இரு டிபன்டர்களுக்கு ஊடாக துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த 3-வது நிமிடத்தில் கிளியான் பாப்பே கொடுத்த கிராஸை கோல் கம்பத்துக்கு நெருக்கமாக நின்ற ஆலிவர் கிரவுடு தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
இதனால் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணியினர் முயற்சிசெய்த போதிலும் அவர்களால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
குரோஷியா – மொராக்கோ: ‘எஃப்’ பிரிவில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரோஷியா – மொராக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டம்கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.
சாம்பியன்களுக்கு ஏற்பட்ட சோகத்துக்கு முடிவு…: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 2010-ம் ஆண்டு முதல் நடப்பு சாம்பியன் அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. 2006-ல் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி 2010-ம் ஆண்டு தொடரில் லீக் சுற்றுடன் நடையை கட்டியது. 2010-ல் பட்டம் வென்ற ஸ்பெயினுக்கு 2014-ல் இதே கதிதான் நேர்ந்தது. 2014-ல் மகுடம் சூடிக்கொண்ட ஜெர்மனி 2018-ம் ரஷ்ய உலகக் கோப்பையில் லீக் சுற்றில் படுதோல்விகளை சந்தித்து வெளியேறியது. இதனால் பிரான்ஸ் அணி மீது அழுத்தம் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த அணி அபராமாக விளையாடி சோகத்துக்கு முடிவு கட்டி உள்ளது.
ஹன்றி சாதனை சமன்…: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரான்ஸ் வீரர் ஆலிவர் கிரவுடு 2 கோல்கள் அடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தியரி ஹென்றியுடன் இணைந்துள்ளார் ஆலிவர் கிரவுடு. இருவரும் தலா 51 கோல்கள் அடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago