FIFA WC 2022 | 24 மணி நேரத்தில் மூன்று போட்டிகள் 0-0 என டிரா

By செய்திப்பிரிவு

தோஹா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரையில் நடந்து முடிந்துள்ள 9 போட்டிகளில் நான்கு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. அதில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 0-0 என எந்த அணியும் கோல் பதிவு செய்யாமல் ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

டென்மார்க் - துனிசியா, போலந்து - மெக்சிகோ மற்றும் மொராக்கோ - குரோஷியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளில் எந்தவொரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டிதான் 0-0 என சமனில் முடிந்தது. ஆனால், இந்த முறை இதுவரையிலான 9 போட்டிகளில் மூன்று போட்டிகள் 0-0 என முடிவடைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அதுவே பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற அணிகள் தங்கள் முதல் ஆட்டத்தில் முறையே 4 மற்றும் 6 கோல்களை பதிவு செய்து மாஸ் காட்டியுள்ளன.

நாளை பெல்ஜியம் - கனடா, சுவிட்சர்லாந்து - கேமரூன், உருகுவே - தென் கொரியா மற்றும் போர்ச்சுகல் - கானா அணிகள் தங்கள் முதல் குரூப் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளன. வரும் டிசம்பர் 3-ம் தேதி வரையில் குரூப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்