மெல்பேர்ன்: சர்வதேச கிரிக்கெட் களத்தில் 1043 நாட்களுக்குப் பிறகு சதம் பதிவு செய்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த சதத்தை அவர் விளாசி உள்ளார்.
36 வயதான டேவிட் வார்னர், கடந்த 2009 வாக்கில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் அவர், அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 141 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 6007 ரன்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்களும் அடங்கும்.
கடைசியாக கடந்த 2020 ஜனவரி வாக்கில் இந்திய அணிக்கு எதிராக வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் அவர் சதம் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றிலும் மொத்தம் 71 இன்னிங்ஸ் விளையாடிய அவரால் சதம் பதிவு செய்ய முடியவில்லை. இன்று அந்த தாகத்தை போக்கிக் கொண்டுள்ளார் அவர். இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாச எடுத்துக் கொண்ட நாட்களை காட்டிலும் 23 நாட்கள் கூடுதலாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து 269 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் வார்னர். 102 பந்துகளில் 106 ரன்களை அவர் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 48 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்தது. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago