FIFA WC 2022 | 6 - 2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது இங்கிலாந்து

By செய்திப்பிரிவு

தோஹா: நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் குரூப் ‘பி’ சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் விளையாடின. இதில் இங்கிலாந்து அணி 6 - 2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.

இந்த போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 3 - 0 என முன்னிலை வகித்தது ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோலை பதிவு செய்து 4 - 0 என்ற எண்ணிக்கையில் முன்னிலை பெற்றது. ஈரான் அணி ஸ்ட்ரைக்கர்களுக்கு பந்து பாஸ் ஆகவே இல்லை. ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஈரான் வீரர் மெஹ்தி, தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.

ஆனாலும் அடுத்த சில நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை பதிவு செய்து இங்கிலாந்து 6 - 1 என லீட் எடுத்தது. இறுதியில் எக்ஸ்ட்ரா டைமின் 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் மெஹ்தி. ஆட்ட நேர முடிவில் 6 - 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் சாக்கா இரண்டு கோல்களை பதிவு செய்தார். ஜூட், ஸ்டெர்லிங், மார்க்கஸ், ஜேக் ஆகியோர் தலா ஒரு கோல் பதிவு செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்