“அவர் எங்கும் இருக்கிறார்!” தோனி குறித்த கோலியின் வைரல் பதிவு

By செய்திப்பிரிவு

“அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்” என்ற முன்னாள் கேப்டன் தோனி குறித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பதிவு வைரலாகி வருகின்றது.

கோலி - தோனி இடையேயான நட்பை பற்றி இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். தோனியின் கடின காலத்தில் கோலியும், கோலியின் கடின காலங்களில் தோனியும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக வருவதை நாம் சமீப காலங்களில் பார்த்திருப்போம். இது தொடர்பாக இருவரும் நேர்காணல்களிலும் பகிர்ந்துள்ளனர்.

அதேபோல், தோனியின் தீவிர ரசிகராகவே விராட் கோலி வலம் வருவதையும் கவனிக்கலாம். அந்த வகையில், கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி படம் இடம்பெற்றுள்ள தண்ணீர் பாட்டிலின் படத்தை குறிப்பிட்டு, “அவர் எங்கும் எங்கு இருக்கிறார். தண்ணீர் பாட்டிலிலும் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். கோலியின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சில மாதங்களுக்கு முன்னர் கூட, தோனி உடனான பார்ட்னர்ஷிப்கள் எனக்கு என்றென்றும் ஸ்பெஷல்தான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். அந்தப் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்