கங்குலி போல் கோலி செயல்பட்டால் அயல்நாடுகளிலும் வெற்றி பெறலாம்: சேவாக் கணிப்பு

By இரா.முத்துக்குமார்

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய டெஸ்ட் அணி சிறந்த பந்து வீச்சை கொண்டுள்ளதால் துணை கண்டங்களுக்கு வெளியே நடைபெறும் போட்டியில் கங்குலி தலைலைமையிலான இந்திய அணி 2000 முதல் 2004-ம் ஆண்டு வரை எப்படி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதோ அதேபோல் வெற்றிகளை குவிக்கும் என வீரேந்திர சேவக் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த ஒரு வருடகாலமாக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிக்கு எதிரான தொடரை 3-0 என கைப்பற்றி நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் சேவக், டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, துணைக்கண்டங்களுக்கு வெளியே நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் தகுதியையும், திறமையையும் பெற்றுள்ளது என நான் நம்புகிறேன். கங்குலி தலைமையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளை வென்றது போல தற்போதைய அணியால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

விராட் கோலியை தலைமையாக கொண்ட பேட்டிங் குழு சிறப்பாகவே உள்ளது. இதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். அதேவேளையில் விக்கெட்களை கைப்பற்ற வேண்டுமானால் சிறந்த பந்துவீச்சு வேண்டும். தற்போது நாம், முகமது சமி போன்ற புத்திசாலித்தனமாக பந்து வீச்சாளரை பெற்றுள்ளோம். உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா உள்ளிட்டோராலும் வெளிநாட்டு தொடர்களில் வெற்றியை தேடித்தர முடியும்.

இந்திய ஆடுகளங்களில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இவர்கள், வெளிநாட்டு தொடர்களில் சிறந்த திறனை வெளிப்படுத்த முடியாததற்கு எந்த காரணமும் இல்லை. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 அல்லது 2-1 என கைப்பற்ற வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி மீண்டு வரும் என எதிர்பார்க்கிறேன். அதனாலேயே 4-0 என தொடரை இந்திய அணி வெல்லக்கூடும் என நான் கருதவில்லை.

ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பன்டுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அவர் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் உயர்ந்த நிலையை அடைந்ததை நான் பார்க்கவில்லை.

அணியில் இடத்தை பிடிக்க வேண்டுமானால் அதற்கு வழிமுறைகள் உள்ளது. இந்திய ஏ அணியில் கிடைக்கும் வாய்ப்பை ரிஷப், தொடர்ச்சியாக சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு சேவக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்