FIFA WC 2022 | ‘‘அதிகபட்சமாக இன்னும் இரண்டு மூன்று வருடங்கள்’’ - ஓய்வு குறித்து பேசிய கிறிஸ்டியானோ ரொனால்டோ

By செய்திப்பிரிவு

கத்தார்: சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்டத்தின் அனைத்து கால கோல் சாதனையாளரான கிறிஸ்டியானோ ரொனால்டா சமீபத்தில் தனது தொழில்முறை வாழ்க்கையின் 700-வது கிளப் கோல் மற்றும் சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களைப் பதிவுசெய்தார். ரொனால்டோ 2016-ம் ஆண்டு யூரோ உலகக் கோப்பையை போர்ச்சுகல் அணியுடன் ஒரு உணர்ச்சிப் பூர்வமானதருணத்தில் வென்றார். ஆனால் உலகக் கோப்பை தொடரில் ரொனால்டோவின் சிறந்த முயற்சி 2006ல் அரையிறுதி வரை முன்னேறியது தான். பீலே, மிரோஸ்லாவ் க்ளோஸ், உவே சீலர் ஆகியோரது சாதனையை முறியடித்து ஐந்தாவது முறையாக தொடர்ச்சியாக உலகக் கோப்பையில் கோல் அடிக்கும் முனைப்பில் உள்ளார் ரொனால்டோ.

எனினும் அவருக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கக்கூடும். ஏனென்றால், அவருக்கு வயது 37. இந்த பேச்சுக்களுக்கு மத்தியில் உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் ரொனால்டோ பேட்டியளித்துள்ளார். அதில், ஓய்வு குறித்து பேசியுள்ளார். "இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் அதிகபட்சமாக விளையாடுவேன். ஓய்வுக்கு 40 வயது சரியானதாக இருக்கும். அப்போது எனது கால்பந்து வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்புகிறேன். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. சில நேரங்களில் நீங்கள் திட்டமிட்ட விஷயங்கள் நடக்காமல் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இன்னொரு கேள்விக்கு பதிலளித்த ரொனால்டோ, "என் அணி உலகக்கோப்பையை வென்றால் அதோடு கால்பந்து வாழ்க்கையையும் முடித்துக்கொண்டு ஓய்வுபெற்று விடுவேன்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்