விசாகப்பட்டண டெஸ்ட் போட்டியில் இன்று சதம் எடுத்த புஜாரா, இந்திய அணி பெரிய ரன் எண்ணிக்கையை முதல் இன்னிங்ஸில் எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆட்டம் முடிந்த பிறகு புஜாரா கூறியதாவது:
இந்தத் தொடர் எனக்கு இவ்வாறாகத் தொடங்கியிருப்பது குறித்து உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். ராஜ்கோட் சதத்திலிருந்து மேலும் தொடர விரும்பினேன்.
இன்று கூட்டணி அமைக்க முடிவெடுத்தோம், இன்று முழுதுமே ஆட விரும்பினோம். நாங்கள் (கோலி, புஜாரா) அருமையாக தொடங்கினோம், ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தோம். கோலி பந்துகளை அருமையாக டைம் செய்தார்.
சதத்திற்குப் பிறகு தன்னம்பிக்கையில் உத்வேகம் ஏற்பட்டது. முதல் செஷனில் சில தவறான புரிதல் இருந்தது (ரன் அவுட் வாய்ப்பில் பிழைத்ததைக் குறிப்பிடுகிறார்) ஆனால் உணவு இடைவேளையின் போது நாங்கள் இருவரும் அதனை பேசித் தீர்த்துக் கொண்டோம்.
உணவு இடைவேளைக்குப் பிறகு நன்றாக அமைந்தது. இந்தப் பிட்ச் ராஜ்கோட் பிட்சை விட சற்றே மெதுவானது. பிட்சின் இரு பக்கவாட்டுப் பகுதிகளிலும் பவுலர்களின் காலடித்தடங்கள் நிறைய ஏற்பட்டுள்ளன.
ஆட்டம் போகப்போக ஆஃப் ஸ்பின்னர்களுக்கு பிட்ச் உதவிகரமாக அமையும். 2-ம் நாள் முடிவின் போது பிட்ச் மேலும் விரிசலடையும். நாங்கள் பெரிய ஸ்கோரை எடுக்க விரும்புகிறோம், இதனால் 2-வது இன்னிங்ஸில் மீண்டும் பேட் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது என்று நம்புகிறேன்.
இவ்வாறு கூறினார் புஜாரா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago