பந்தைச் சேதப்படுத்தியதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் மீது ஐசிசி குற்றச்சாட்டு

By ஏஎஃப்பி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்தியதாக தெ.ஆ. கேப்டன் டுபிளெசிஸ் மீது ஐசிசி குற்றம்சாட்டியதையடுத்து அவர் ஒரு போட்டிக்கு தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை ஏற்காத டுபிளெசிஸ் சட்ட ஆலோசனையுடன் புகாரை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்.

ஆட்ட நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் முன்னிலையில் விசாரணை நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புகார் குறித்து ஐசிசி தனது அறிக்கையில், “செவ்வாய்கிழமையன்று டெஸ்ட் போட்டியில் இது நடந்துள்ளது. பந்தில் எச்சில் தடவிய போது செயற்கைப் பொருளின் சேர்க்கையும் அதில் இருந்ததாக புகார் எழுந்துள்ளது, இது பந்தின் தன்மையை வேண்டுமென்றே மாற்றுவதான செயல்” என்று கூறியுள்ளது.

ஐசிசி தலைமைச் செயலதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் இந்த புகாரை எழுப்பினார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது குறித்து புகார் எதையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தென் ஆப்பிரிக்க அணியினர் மெல்பர்னில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, “நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பதற்குக் காரணம் இந்தப் புகாருக்கு எதிராக ஒற்றுமையைக் காட்டத்தான். நாங்கள் உண்மையில் இதனை ஜோக் என்றே நினைத்தோம்” என்றார் ஹஷிம் ஆம்லா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்