T20 WC | இதை கர்மா என சொல்வர்: ஷோயப் அக்தர் ட்வீட்டுக்கு ஷமி பதில் ட்வீட்

By செய்திப்பிரிவு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இந்த நிலையில் அது குறித்து ட்வீட் செய்திருந்தார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர். அதற்கு இந்திய வீரர் முகமது ஷமி பதில் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றில் கடைசி நேரத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இந்த நிலையில்தான் தோல்வியை தழுவி உள்ளது பாகிஸ்தான். அதனால் அந்த அணியின் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தரும் அடங்குவார். அவர் உடைந்த இதயத்தின் எமோஜியை பகிர்ந்து ட்வீட் செய்திருந்தார். ‘மன்னிக்கவும் சகோதரா. இதை கர்மா என்பார்கள்’ என ஷமி பதில் அளித்துள்ளார். அது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷமி தேர்வு செய்த போது அக்தர் விமர்சித்ததாக தகவல். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஷமி இதனை தெரிவித்துள்ளார் என ரசிகர்கள் சிலர் கருத்து சொல்லியுள்ளனர்.

அதே நேரத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியை ஷமி ட்வீட் மூலம் பாராட்டியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் அற்புதமான பந்து வீச்சு குறித்தும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்