T20 WC | இந்தியா வெளியேறிய நிலையில் தோனியை புகழ்ந்த கம்பீர்

By செய்திப்பிரிவு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி இதற்கு முன்னர் பெற்ற ஐசிசி வெற்றிகள் குறித்தும், உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் குறித்தும் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

தோல்விகளின் போது முந்தைய தரமான வெற்றிகளுக்கான மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். இப்போதும் அது தான் நடந்து வருகிறது. அந்த வகையில்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வென்றுக் கொடுத்த டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகள் இப்போது நினைவலைகளில் வந்து செல்கிறது. இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி உள்ள நிலையில் தோனியை புகழ்ந்துள்ளார் கம்பீர்.

“யாரேனும் ஒருநாள் ரோகித் சர்மாவை காட்டிலும் கூடுதலாக இரட்டை சதங்கள் பதிவு செய்யலாம். யாரேனும் ஒருநாள் கோலியை காட்டிலும் கூடுதலாக சதங்களை விளாசலாம். ஆனால் ஒருபோதும் எந்தவொரு இந்திய கேப்டனாலும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாது என நான் நினைக்கிறேன்” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

தோனி நீங்கலாக ஐசிசி கோப்பையை வென்ற இந்திய கேப்டனாக கபில்தேவ் அறியப்படுகிறார். அவரது தலைமையில் இந்திய அணி 1983 உலகக் கோப்பையை வென்றிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்