கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று பாகிஸ்தான் தன் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூஸிலாந்தைக் காட்டிலும் 62 ரன்களே முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்.
முன்னதாக பாகிஸ்தான் அருமையான வேகப்பந்து வீச்சின் மூலம் 104/3 என்று தொடங்கிய நியூஸிலாந்தை 200 ரன்களுக்கு அதன் முதல் இன்னிங்ஸில் சுருட்டியது.
பிறகு 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் கடைசி செஷனில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டிரெண்ட் போல்ட் 15 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த நீல் வாக்னர் 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணியில் கடைசியில் சில அதிரடி ஷாட்களை ஆடிய சொஹைல் கான் 22 ரன்களுடனும், ஆசாத் ஷபீக் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தொடங்கிய நியூஸிலாந்து தங்களது கடைசி 7 விக்கெட்டுகளை 96 ரன்களுக்கு இழந்தது.
நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் ஆடிய சில ஷாட்களும் கோளாறுதான். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பசுந்தரை ஆடுகளத்தில் பொறுமை காக்க வேண்டிய நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் மழை அச்சுறுத்தல் காரணமாக விரைவு ரன்களை விரும்பினர்.
நேற்று நாட் அவுட்டாக இருந்த ஜீத் ராவல் 1 ரன் மட்டுமே சேர்த்து 55 ரன்களிலும், நிகோல்ஸ் 30 ரன்களிலும் முதல் 4 ஒவர்களில் ஆமிர், சொஹைல் கானிடம் வெளியேறினர்.
அறிமுக ஆல் ரவுண்டர் டி கிராண்ட்ஹோம் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்ததோடு, பேட்டிங்கில் இறங்கி 29 ரன்களை 6 பவுண்டரிகளுடன் விரைவில் எடுத்தார். சவுதீ (22), வாக்னர் (21) ஆகியோரும் விரைவில் ரன் எடுத்தனர். நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸ் 55.5 ஓவர்களில் 200 ரன்களுக்கு முடிந்தது.
பாகிஸ்தான் தரப்பில் ரஹத் அலி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்களையும், சொஹைல் கான் மற்றும் ஆமிர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
67 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சமி அஸ்லம் 7 ரன்களில் கிராண்ட்ஹோம் பந்தில் வெளியேறினார். இவரும் அசார் அலியும் கடும் தடுமாற்றத்துடன் நின்று 18 ஓவர்களில் 21 ரன்களையே சேர்த்தனர். அசார் அலி (31), பாபர் ஆசம் (29) இணைந்து மேலும் கட்டை போட்டு 32.5 ஓவர்களில் வேதனையான 37 ரன்களைச் சேர்த்தனர். அப்போது நீல் வாக்னர் பாபர் ஆசமை வீழ்த்தினார். யூனிஸ் கான் கிரீன் டாப் விக்கெட்டில் எல்லாம் சோபிக்கக் கூடியவர் அல்ல என்பதால் முதல் இன்னிங்ஸ் 2 ரன்களுடன் 2-வது இன்னிங்சில் 1 ரன்னில் வாக்னரிடம் வீழ்ந்தார்.
மிஸ்பா உல் ஹக் (13), அசார் அலி இணைந்து ஸ்கோரை 93 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். மிஸ்பா அப்போது சவுதியிடம் வெளியேற, சர்பராஸ் அகமது (2), மொகமது ஆமிர் (6) ஆகியோரை போல்ட் வீழ்த்தினார், இதில் சர்பராஸ் பவுல்டு ஆனார். அசார் அலியையும் போல்ட் பவுல்டு செய்தார்.
கடைசியில் இறங்கி சொஹைல் கான் 3 பவுண்டரிகளையும் ஒரு அருமையான சிக்சரையும அடித்து 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். ஆசாத் ஷபிக் 6 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் 129/7. என்று 62 ரன்களே முன்னிலை பெற்றுள்ளதால் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago