T20 WC செமி பைஃனல் | மகுடத்தை 3 முறை தவறவிட்ட நியூஸிலாந்து - மழை வந்தால் என்ன ஆகும்?

By செய்திப்பிரிவு

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவிலான தொடரில் முக்கியமான கட்டத்தில் நியூஸிலாந்து சரிவை சந்திப்பதும் ஒன்றும் புதிதல்ல. கடந்த நான்கு உலகக் கோப்பைகளிலும் நியூஸிலாந்து அணியினர் தொடர்ச்சியாக அரை இறுதியை எட்டியுள்ளனர். ஆனால் கோப்பையை வெல்லும் தூரத்திற்கு அவர்களால் செல்ல முடியவில்லை.

கடந்த 7 ஆண்டுகளில் நியூஸிலாந்து அணி 3 உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. இதில் 2015 மற்றும் 2019-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களும், 2021-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் அடங்கும். எனினும் இம்முறை நியூஸிலாந்து அணிக்கு மிகவும் பொருத்தமான சூழ்நிலை நிலவுவதாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள், அங்கும் நிலவும் சூழ்நிலை நியூஸிலாந்து அணிக்கு உகந்ததாக உள்ளது.

நியூஸிலாந்தின் சோகம்: உலகக் கோப்பை வரலாற்றில் ஒருநாள்போட்டி மற்றும் டி 20 வடிவில் நியூஸிலாந்து அணியானது அரை இறுதியில் பாகிஸ்தானை இதுவரை வென்றது இல்லை. 1992, 1999-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டங்களில் பாகிஸ்தானிடம், நியூஸிலாந்து அணி வீழ்ந்திருந்தது. 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை அரை இறுதியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக நியூஸிலாந்து அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.

30 வருடத்துக்கு பின்… : 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் அரை இறுதியில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்தை வீழ்த்தியிருந்தது. தற்போது 30 வருடங்களுக்கு பிறகு அதே மண்ணில் இரு அணிகளும் டி 20 உலகக் கோப்பை அரை இறுதியில் சந்திக்கின்றன.

மழை வந்தால் என்ன ஆகும்?: அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு கூடுதல் நாள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் நாளை பயன்படுத்தியும் மழையால் அரை இறுதி ஆட்டங்கள் கைவிடப்பட்டால் சூப்பர் 12 சுற்றில் அவரவர் குரூப் பிரிவில் முதலிடம் வகித்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டியும் திட்டமிடப்பட்ட நாளிலும், கூடுதல் நாளிலும் மழையால் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் உலகக் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்