''அடுத்த வாரத்தில் பெரிய கேக் வெட்டலாம்'' - விராட் கோலி அளித்த உலகக்கோப்பை நம்பிக்கை

By செய்திப்பிரிவு

மெல்போர்ன்: இந்திய அணி சார்பாக விராட் கோலியின் பிறந்தநாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் இருந்து வருகிறார். மேலும், வங்க தேசத்துடனான கோலியின் சிறப்பான ஆட்டம், அவரை விமர்சித்து வந்தவர்களை பாராட்ட வைத்துள்ளது.

விராட் கோலியின் பிறந்தநாளான நேற்று அவருக்கு மேலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதனிடையே, மெல்போர்ன் மைதானத்தில் வைத்து விராட் கோலியை நேரில் சந்தித்து இந்திய பத்திரிகையாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவர்கள் வாங்கி வந்த கேக்கையும் விராட் கோலி வெட்டி அவர்களை நெகிழ வைத்தார்.

அப்போது இந்திய பத்திரிகையாளர்கள், "டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு அடுத்த வாரம் இதைவிட பெரிய கேக் வெட்டலாமா" என்று கேட்க அதற்கு விராட் கோலி, "நிச்சயம், நானும் நம்புகிறேன்" என்று பதில் கொடுத்துள்ளார்.

முன்னதாக, இந்திய அணி சார்பாக விராட் கோலியின் பிறந்தநாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்