சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் நியூஸிலாந்து அணி 7 புள்ளிகளை குவித்து வலுவான ரன் ரேட்டுடன் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. மீதம் உள்ள ஒரு இடத்துக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் அந்த அணியின் ரன் ரேட் (-0.173) குறைவாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது இன்று நடைபெறும் இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்து தெரிய வரும். இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 7 புள்ளிகளை பெற்று எளிதாக அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஏனெனில் இங்கிலாந்து அணியின் ரன் ரேட் தற்போது 0.547ஆக உள்ளது. இலங்கையை இங்கிலாந்து அணி வீழ்த்தினால் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறும். ஒருவேளை இலங்கை வெற்றி பெற்றாலோ அல்லது மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலோ ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago