நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19-வது ஓவரை வீசிய அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் 2, 3 மற்றும் 4-வது பந்துகளில் முறையே கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷாம், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
இந்த டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்படுவது இது 2-வது முறையாகும். முதல் சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியிருந்தார். ஒட்டுமொத்தமாக டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய 6-வது வீரர் என்ற சாதனையையும், 2-வது அயர்லாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஜோஷ் லிட்டில். 2021-ம் ஆண்டு அதே அணியைச் சேர்ந்த கர்டிஸ் கேம்பரும் ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago