அடிலெய்ட்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி உள்ளது அயர்லாந்து அணி. இந்த போட்டியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி கிட்டத்தட்ட தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் குவித்தார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை அயர்லாந்து விரட்டியது. தொடக்கம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் அயர்லாந்து தொடக்க ஆட்டக்காரர்களான பால் ஸ்டர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி. இருவரும் போல்ட் மற்றும் சவுதி பந்து வீச்சை அபாரமாக விளையாடி இருந்தனர். முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் ஆட்டத்தை அணுகிய விதம் நியூஸிலாந்துக்கு அச்சுறுத்துலாக அமைந்தது.
இருந்தும் அலார்ட் ஆன நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தில் திருப்பம் கொடுத்தனர். செட் ஆகி விளையாடிக் கொண்டிருந்த பால்பிர்னி விக்கெட்டை சான்ட்னர் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் ஸ்டர்லிங் விக்கெட்டை சோதி கைப்பற்றினார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் அயர்லாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. அதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
» ஐபிஎல் 2023 | ஜடேஜா வேண்டும்: சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி கேட்டதாக தகவல்
» வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட நெருங்கி உள்ளது. ஆனால், அது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் அடுத்த இரண்டு போட்டிகளின் முடிவை பொறுத்து இருக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago