எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் இருப்பு மிகவும் அவசியம் என அணி நிர்வாகத்திடம் தோனி சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜடேஜா சென்னை அணியுடன் தனது பயணத்தை மீண்டும் தொடர வாய்ப்புகள் அதிகம் என நம்பப்படுகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டங்களில் ஜடேஜா தேவை என்றும், அவரது இடத்தில் மாற்று வீரரை நிரப்ப முடியாது என்றும் சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சீசனில் அணி நிர்வாகம் மற்றும் ஜடேஜா தரப்பில் கருத்து முரண் ஏற்பட்டது. அந்த சீசனில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதோடு சீசன் முடிவதற்குள் தொடரில் இருந்து விலகினார்.
அதனால் அவர் அடுத்த சீசனில் சென்னை அணியில் விளையாடுவது சந்தேகம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 16-ம் தேதி அடுத்த சீசனுக்கான ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரத்தை வெளியிட வேண்டும். இதற்கான கேடு தேதி வரும் 15-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான் தோனி இதனை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விடுவிக்கப்பட்டால் பல்வேறு ஐபிஎல் அணிகள் அவர் ஏலத்தில் எடுக்க முன்வர வாய்ப்புள்ளது.
» தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: அரசு கண்காணிக்க கே.எஸ்.அழகிரி கோரிக்கை
» ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் வழக்கு: விசாரணையை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 142 போட்டிகளில் ஜடேஜா விளையாடி உள்ளார். 1440 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் 105 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். அபார ஃபீல்டரான அவர் 69 கேட்ச்களையும் பிடித்துள்ளார். தற்போது காயம் காரணமாக அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை. வெகு விரைவில் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் கம்பேக் கொடுக்க உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago