அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை கொஞ்சம் போராடி வென்றது நெதர்லாந்து கிரிக்கெட் அணி. சூப்பர் 12 சுற்று போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே, பேட்டிங்கை தேர்வு செய்தது. 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்திருந்தது ஜிம்பாப்வே. 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து விளையாடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீபன், 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனாலும் இரண்டாவது விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் மேக்ஸ் மற்றும் டாம் கூப்பர். 32 ரன்களில் கூப்பர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அரை சதம் விளாசி மேக்ஸ் அவுட்டானார். அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தான் தேவைப்பட்டன.
ஆனாலும் களத்தில் பேட் செய்த பேட்ஸ்மேன்கள் அந்த ரன்களை எடுக்கத் தடுமாறினர். அதனால் எளிதில் வெல்ல வேண்டிய போட்டியை கொஞ்சம் போராடி, வெற்றியை தாமதமாகப் பெற்றது நெதர்லாந்து. 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்களை எடுத்தது நெதர்லாந்து. மற்றொரு போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் மழை பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
29 mins ago
விளையாட்டு
40 mins ago
விளையாட்டு
50 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago