இந்திய அணியில் புறக்கணிப்பு | ரியாக்ட் செய்த பிரித்வி ஷா, ரவி பிஷ்னோய்..

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் விளையாட உள்ள தொடர்களில் இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அணியின் விவரம் வெளியானதும் தாங்கள் தேர்வு செய்யப்படாததை அறிந்து விரக்தி அடைந்துள்ளன. அதற்கு அவர்கள் ரியாக்ட்டும் செய்துள்ளனர். ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து மற்றும் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியை நேற்று அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். ஒவ்வொரு தொடரிலும் வெவ்வேறு கேப்டன்கள் மற்றும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து தனது திறனை நிரூபித்து வருகிறார் பிரித்வி ஷா. இருந்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. “அவரிடம் எந்த தவறும் இல்லை. எங்கள் சிஸ்டத்தில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளோம். அவருடன் தொடர்ந்து நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். வெகு விரைவில் பிரித்விக்கு வாய்ப்பு கிடைக்கும்” என பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேட்டன் சர்மா தெரிவித்துள்ளார்.

பிரித்வி ஷா பகிர்ந்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி

“நீங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் சாய்பாபா” என பிரித்வி ஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். ரஞ்சிக் கோப்பையில் 355 ரன்களும், சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் 285 ரன்களும் குவித்துள்ளார் அவர்.

“பின்னடைவை விட எப்போதுமே கம்பேக் ரொம்ப வலிமையானது” என ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். “ஹோப்” என தெரிவித்துள்ளார் நிதிஷ் ராணா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE