T20 WC | ‘என்னைத் தாண்டி அடி பார்க்கலாம்’ - அயர்லாந்து வீரர் மெக்கார்த்தியின் அபார ஃபீல்டிங்

By செய்திப்பிரிவு

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணியை வீழ்த்தி உள்ளது ஆஸ்திரேலிய அணி. இதன்மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது ஆஸ்திரேலியா. இருந்தாலும் இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி சின்னச் சின்ன தாக்கங்களை ஏற்படுத்தி இருந்தது. அதில் ஒன்றுதான் அயர்லாந்து வீரர் மெக்கார்த்தியின் அபார ஃபீல்டிங்.

டி20 கிரிக்கெட்டின் வரவுக்கு பின்னர் ஃபீல்டர்கள் ஸ்பைடர்மேன் போல அசாத்தியமான செயல்களையும் களத்தில் அசால்டாக செய்து வருகின்றனர். காற்றில் அப்படியே அங்கும் இங்குமாக பறந்தும், பாய்ந்தும் மேஜிக் செய்கிறார்கள். அப்படியொரு செயலைதான் அயர்லாந்து வீரர் பேரி மெக்கார்த்தி செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அயலர்ந்து பந்து வீசியபோது அந்த இன்னிங்ஸின் 15-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்டாய்னிஸ் லாங்-ஆன் திசையில் ஒரு பெரிய ஷாட்டை வான் நோக்கி ஆடி இருப்பார். அங்கு ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த மெக்கார்த்தி, பந்து வரும் இடத்தை சரியாக கணித்து, பவுண்டரி லைனுக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்திருப்பார். இருந்தாலும் அது சிக்ஸராக மாறும் வாய்ப்பு இருந்த காரணத்தால் பந்தை மைதானத்திற்குள் த்ரோ செய்திருப்பார். அதை மற்றொரு ஃபீல்டர் எடுத்து பாஸ் செய்திருப்பார்.

அவரது அபார மற்றும் துல்லியமான ஃபீல்டிங் திறன் மூலம் எதிரணி எடுக்க வேண்டிய 4 ரன்களை தடுத்திருப்பார். அதை டக்கவுட்டில் இருந்து பார்த்த ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் பாராட்டி இருப்பார். அவர் மட்டுமல்ல போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் அவரை பார்ட்டி இருந்தனர். இந்தத் தொடரின் சிறந்த ஃபீல்டிங் எஃபோர்ட்களில் ஒன்றாக அது உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE