தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை சேர்த்தது.
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா - கே.எல். ராகுல் இணை ஆளுக்கொரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினர். எனினும், லுங்கி இங்கிடி வீசிய 4வது ஓவரில் இருவரும் சொல்லிவைத்தார் போல அடுத்தடுத்து விக்கெட்டாக்கி நடையைக் கட்டினர்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி - சூர்யகுமார் இணை பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்கவில்லை. கடந்த சில ஆட்டங்களில் அதிரடி காட்டி வந்த விராட் கோலி, இன்றைய ஆட்டத்தில் 12 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹீடாவும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் 8 ஓவர் முடிவில் 47 ரன்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது இந்திய அணி. அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களில் கிளம்ப, தினேஷ் கார்த்திக் 15 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களுடன் கிளம்பினார். அடுத்தடுத்து வந்த அஸ்வின், ஷமி இருவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 133 ரன்களை இந்திய அணி சேர்த்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் லூங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும், அர்னிச் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து தென்னாப்ரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago