அமெரிக்க கோல்கீப்பர் போராட்டம் வீண்: காலிறுதியில் பெல்ஜியம் அணி

By ஆர்.முத்துக்குமார்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம், காலிறுதியில் அர்ஜென்டீனாவைச் சந்திக்கிறது.

அமெரிக்க அணியின் அபாரமான உலகக் கோப்பைத் தொடர் ஆட்டம், இந்தப் போராட்டத் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் அமெரிக்க அணி வருத்தம் அடைந்தாலும், அந்த அணி பெருமைப்பட உகந்ததே இந்த உலகக் கோப்பையில் அந்த அணியின் ஆட்டம்.

அமெரிக்க அணியின் கோல்கீப்பர் இந்தப் போட்டியில் தடுத்த கோல்கள், உண்மையில் வேறு அணியாக இருந்திருந்தால் அதனை உயிர்ப்படையச் செய்திருக்கும். டிம் ஹோவர்ட் தனது வாழ்நாளின் சிறந்த போட்டியை ஆடினார். இவரது கோல் கீப்பிங்தான் ஆட்டத்தை கூடுதல் நேரத்திற்கு இட்டுச் சென்றது.

பெல்ஜியம் அணியின் ஆரிஜி, ஈடன் ஹசார்ட், கெவின் டி புருய்ன், டிரைஸ் மெர்டென்ஸ், என்று பெயரிடலாமே தவிர சிகப்பு சட்டைக்காரர்கள் அனைவரது முயற்சியையும் அமெரிக்க ஹோவர்ட் முறியடித்தார். அதாவது, பெல்ஜியம் அணிக்கே நம்பிக்கை குறைந்து போகும் அளவுக்கு ஹோவர்ட் சுவராக உயர்ந்து நின்றார். ஆனால் இந்த ஹீராயிக் கோல் கீப்பிங் பெல்ஜியம் வீரர் ரொமிலு லுகாகு வந்தவுடன் சற்றே ஆட்டம் காணத் தொடங்கியது.

ஹோவர்டும் என்ன செய்வார்? 90 நிமிடங்கள் அயராது பந்தைப் பிடித்து களைப்படைந்தார். 90 நிமிடங்கள் முடிந்து 3வது நிமிடத்திலேயே லுகாகுவின் ஆட்டம் தெரிய ஆரம்பித்தது. வலது புறம் கெவின் மிரலாஸ் பந்தை லுகாகுவிடம் அடிக்க அமெரிக்க வீரர் மேட் பெஸ்லர் கொடுத்த சவாலை ஒன்றுமில்லாமல் ஊதிக் கடந்து வந்து பெனால்டி பகுதியில் டீ ப்ரூய்னுக்கு அடிக்க, அவர் கடைசியாக ஹோவர்டைக் கடந்து முதல் கோலை அடித்தார்.

பெல்ஜியம் அடித்த இரண்டாவது கோல், லுகாகுவே நேரடியாக அடித்த கோல் ஆகும். ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் டீ ப்ரூய்ன் ஒரு பந்தை டயக்னலாக அழகாக அடித்துப் பாஸ் செய்ய லுகாகு அதனை அலட்சியமாக அமெரிக்க கோல் கீப்பர் ஹோவர்டைத் தாண்டி கோலை அடித்தார். அவர் அடித்த முறை இந்த ஹோவர்டா இத்தனை நேரம் நம்மை கோல் அடிக்க விடாமல் செய்தார் என்று கேட்பது போல் இருந்தது.

ஆனால், அமெரிக்க அணி அயர்ந்துவிடவில்லை. 105வது நிமிடத்தில் அந்த அணியின் ஜூலியன் கிரீன் தன் அணியின் முதல் கோலை அடித்தார்.

பிறகு, கூடுதல் நேரம் முடிய 6 நிமிடங்கள் இருக்கும்போது, ஹோவர்டைப் பற்றி பேசிய அளவுக்குப் பேசக்கூடிய ஒரு தடுப்பை நிகழ்த்தினார் பெல்ஜியம் கோல் கீப்பர் திபோ கோர்த்தாய். அமெரிக்க வீரர் கிளிண்ட் டெம்ப்ஸ்பே மிக நேராக, நிச்சயம் கோல்தான் என்று அடித்த ஷாட்டை பெல்ஜியம் கோல் கீப்பர் திபோ கோர்த்தாய் தடுத்தார். இது உண்மையில் பெல்ஜியத்தைக் காப்பற்றிய தடுப்பாகும்.

ஆனால், 90 நிமிட ஆட்டத்திலேயே கடைசியில் 0-0 என்று இருந்தபோது, அமெரிக்கா கடைசி வினாடி கோலை அடித்து பெல்ஜியத்தை வெளியேற்றிருக்க முடியும், ஆனால், ஜெர்மைன் ஜோன்ஸால் உருவக்கப்பட்ட கோல் வாய்ப்பை அமெரிக்க வீரர் வான்டலோவ்ஸ்கி கோலுக்கு 6 அடிக்கு முன்னால் இருந்து கொண்டு கோட்டைவிட்டார். இது அந்த அணிக்கு ஒரு பெரிய ஏமாற்றமான விரயம்தான்.

ஆனாலும், பெல்ஜியம் அடித்திருக்க வேண்டிய ஒரு 4 கோல்களையாவது ஹோவர்ட் தடுத்திருக்கிறாரே. அப்படிப் பார்க்கும்போது இந்த விரயத்தை விட ஹோவர்டின் சாதனைதான் பெரிது. காலிறுதியில் அர்ஜென்டீனா - பெல்ஜியம் அணிகள் மோதுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்