போலி மிஸ்டர் பீன் ஆசிப் விளக்கம்

By செய்திப்பிரிவு

சிட்னி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியதை தொடர்ந்து ட்விட்டரில் போலி ‘மிஸ்டர் பீன்’ பதிவு வைரலானது. இதற்கு காரணம் 2016-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் முகமது, ஜிம்பாப்வே நிகழ்ச்சி ஒன்றில் ‘மிஸ்டர் பீன்’ போன்று வேடமிட்டு கலந்து கொண்டதை மையமாக வைத்து ஜிம்பாப்வே ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுதான். இந்த பதிவானது பேசும் பொருளாக மாறியது.

இந்த விவகாரத்தில் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோரும் வேடிக்கையாக கருத்துகளை பதிவிட்டனர். இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆசிப் முகமது, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “ஜிம்பாப்வே நாட்டை மிகவும் நேசிக்கிறேன். பாகிஸ்தான் - ஜிம்பாப்வே போட்டி கடினமாக இருந்தது. ஜிம்பாப்வே அணிக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்