சிட்னி: டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதவுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியாவுடன் நெதர்லாந்து அணி மோதவுள்ளது.
சூப்பர்-12 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அந்த உற்சாகத்தில் இந்திய அணி இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது. இந்திய அணியின் பேட்டிங் ரோஹித், விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என வலுவாக உள்ளது.
நம்பிக்கை நாயகன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்களை விராட் கோலி விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். தனது வாழ்நாளின் மிக முக்கியமானதொரு இன்னிங்ஸை விளையாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார் கோலி. எனவே, அவரிடமிருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் இந்த ஆட்டத்தின்போது வெளிப்படக்கூடும்.அதேபோல் பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், மொகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோர் எதிரணிக்கு சவால்விடும் வகையில் உள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் மிகவும் அருமையாக பந்துவீசினார். எனவே, நெதர்லாந்து வீரர்களையும் அவர் அச்சுறுத்துவார் என நம்பலாம். எனவே வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா களம் காண்கிறது.
அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் நெதர்லாந்து, போதிய அனுபவமின்மை காரணமாக தடுமாறி வருகிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அந்த அணி தோல்வி கண்டிருந்தது. எனவே, இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட அந்த அணி வீரர்கள் முயற்சி செய்வர். நெதர்லாந்து அணியின் விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், பாஸ் டே லீட், காலின் ஆக்கர்மேன், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், பிரெட் கிளாசென், ஆக்கர்மேன், வான் மீக்கெரன் டிம் பிரிங்கிள், ஷரிஷ் அகமது ஆகியோர் வலுசேர்க்கின்றனர். போட்டி பகல் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago