விசாகப்பட்டண டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து தோல்வியை முடுக்கி விட்ட அஸ்வின் 2016-ம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதுவரை அவர் இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 22.23. மேலும் 6 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஹெராத் 8 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 13 டெஸ்ட்களில் 46 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும் இந்த ஆண்டில் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்தை 246 ரன்களில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு எதிரான 2-வது பெரிய வெற்றியாகும். இதற்கு முன்பாக 1986-ல் ஹெடிங்லேயில் 279 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி 4-வது இன்னிங்ஸில் 143.1 ஓவர்கள் பேட் செய்த பிறகு இங்கிலாந்து வைசாகில் 97.3 ஓவர்களை 4-வது இன்னிங்ஸில் பேட் செய்துள்ளது.
இங்கிலாந்து அணியில் 10 பேட்ஸ்மென்கள் எல்.பி. முறையில் ஆட்டமிழந்தனர். இதுதான் இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச எல்.பி.தீர்ப்புகளாகும்.
இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 21 முறை டி.ஆர்.எஸ். பயன்படுத்தினர். இங்கிலாந்து 12 முறையும் இந்தியா 9 முறையும் மேல்முறையீடு செய்தனர். இதில் 6 முறை களநடுவர் தீர்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago