சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அபாரமாக பேட் செய்து அணிக்கு வெற்றியை வசமாக்கினார். அவரது இன்னிங்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் புதுவரவாக இணைந்துள்ளார் மற்றொரு இந்திய வீரரான அஸ்வின். சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை எடுத்துக்காட்டாக சொல்லி கோலியின் இன்னிங்ஸை அஸ்வின் புகழ்ந்துள்ளார்.
கடைசி கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்கள் அஸ்வின் பேட்டில் இருந்து தான் வந்தது. இருந்தாலும் அதற்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தவர் கோலி. அவரும் இந்திய அணி வெற்றி பெற்ற அந்த தருணத்தில் மறுமுனையில் நான்-ஸ்ட்ரைக்கராக விளையாடிக் கொண்டிருந்தார்.
“விராட் கோலி. அவருக்குள்ள என்ன பூந்துடுச்சுன்னே தெரியல. ஏதோ பூந்துடுச்சு சத்தியமா. அதுல ஒண்ணும் சந்தேகமே கிடையாது. இந்த மாதிரிலாம் ஷார்ட்ஸ் ஆடி. ஷார்ட்ஸ விடுங்க. 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும். கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து ‘ஒதலவா’ அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன். அப்போ ஒரு பால்ல ரெண்டு ரன்னு தேவை. அப்படி கண்ணா வச்சுக்கிட்டு அவர் பேசினாரு. ‘இங்க அடி. அங்க அடின்னு’. என்னால என்ன முடியுமோ அத நான் பண்றேன். அப்படின்னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு அந்த பந்த ஆடினேன்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதனை சமூக வலைதளத்தில் வீடியோவாக அவர் பதிவு செய்துள்ளார். இதை அவரது குட்டி ஸ்டோரியில் ஒன்றாக அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
» T20 WC | எரிச்சலூட்டிய 'ஈ' - கவனம் ஈர்க்கும் அயர்லாந்து ரசிகரின் மெசேஜ்
» டி20 உலகக் கோப்பை | பயிற்சிக்குப் பிந்தைய உணவு சரியில்லை: இந்திய அணி அதிருப்தி
Loading...
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago