சிட்னி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆடவருக்கான 8-வது ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் சிட்னியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தை நினைவூட்டக்கூடும். ஏனெனில் அப்போது பட்டம் வெல்வதற்கு இந்த இரு அணிகள்தான் மல்லுக்கட்டியிருந்தன. ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடரை தொடங்குவதில் முனைப்பு செலுத்தக்கூடும். வேகப் பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் கூட்டணி மிரட்ட காத்திருக்கிறது. ஒருவேளை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸம்பா முக்கிய பங்காற்றக்கூடும்.
பேட்டிங்கில் ஆரோன் பின்ச் பார்முக்கு திரும்பி இருப்பது பலத்தை அதிகரித்துள்ளது. டேவிட் வார்னர் கடைசியாக விளையாடிய 5 டி 20 ஆட்டங்களில் 205 ரன்கள் விளாசி சிறந்த பார்மில் உள்ளார். மிட்செல் மார்ஷின் உடற்தகுதி, கிளென் மேக்ஸ்வெல்லின் மோசமான பார்ம் மட்டுமே கவலை அளிப்பதாக உள்ளது.
» T20 WC | சிக்கந்தர் ரசா விளாசல்: சூப்பர் 12-ல் ஜிம்பாப்வே... கொண்டாட்டத்தில் நாட்டு மக்கள்!
» புகழிலிருந்து வீழ்ச்சி... - 8 டி20 உலகக் கோப்பை எடிஷனில் மேற்கிந்திய தீவுகளின் செயல்பாடு எப்படி?
இருப்பினும் அணிக்கு பெரிய ஊக்கம் கொடுக்கக்கூடிய வீரராக உருவெடுத்துள்ளார் டிம் டேவிட். இதுதவிர கடைசி நேரத்தில் கேமரூன் கிரீன் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் கேமரூன் கிரீன் களமிறங்குவது சந்தேகம்தான். ஏனெனில் நேற்றுதான் அவர், அணியினருடன் இணைந்துள்ளார். போட்டியை முடித்து வைக்கும் திறனில் மேம்பட்டுள்ள மேத்யூ வேட், ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோரும் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர். நியூஸிலாந்து அணி 2011-ம்ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் எந்த வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்றது இல்லை. இந்த மோசமான சாதனையுடனேயே டி 20 உலகக் கோப்பையை அணுகுகிறது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி.
மேலும் பயிற்சி ஆட்டத்தில் 98 ரன்களுக்கு தென் ஆப்பிக்காவிடம் சுருண்டிருந்ததும் நியூஸிலாந்து அணியின் பலவீனங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. பேட்டிங்கில் வில்லியம்சனின் மோசமான பார்ம், டேரில் மிட்செலின் உடற்தகுதி ஆகியவை அணியின் நடுவரிசை பேட்டிங்கை வெகுவாக பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. மார்ட்டின் கப்திலும் சிறந்த பார்மில் இல்லை. கடந்த 6 ஆட்டங்களில் அவர், 132 ரன்களே சேர்த்துள்ளார். அதேவேளையில் அதிரடியாக விளையாடி போட்டியை முடித்து வைக்கும் திறன் கொண்ட வீரர்கள் இல்லாதது தேக்க நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் டேவன் கான்வே, ஃபின் ஆலன், கிளென் பிலிப்ஸ் ஆகியோரது பேட்டிங்கில் அணிநிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது. பந்து வீச்சை பொறுத்தவரையில் டிம் சவுதி, டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், ஆடம்மில்ன் தங்களது வேகங்களால் பலம் சேர்க்கக்கூடும்.
இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என வானிலைமையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை 20 ஓவர்களை முழுமையாக நடத்தமுடியவில்லை என்றால் ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் அதற்கு தகுந்தவாறு இரு அணிகளும் தங்களது திட்டங்களை மாற்றிக்கொண்டுகளத்தில் விரைவாக செயல்படும்.
நியூஸிலாந்து அணி 2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்றது இல்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago