ஜிலாங்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து கிரிக்கெட் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இலங்கை அணி. இதன் மூலம் அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. இருந்தாலும் இப்போதைக்கு குரூப் ஏ-வில் அந்த அணி முதலிடமா அல்லது இரண்டாவது இடமா என்பது உறுதியாகாமல் உள்ளது.
இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. குசல் மெண்டிஸ், அசலங்கா ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நெதர்லாந்து விரட்டியது. இருந்தும் சீரான இடைவெளியில் 9 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஓ தவுத் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். 53 பந்துகளில் 71 ரன்களை எடுத்திருந்தார் அவர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது அந்த அணி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் கொஞ்ச நேரம் நிலைத்து நின்று ஆடி இருந்தால் கூட அந்த அணியின் வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசம் அடைந்து இருக்கும்.
இலங்கை சார்பில் ஹசரங்கா 3 விக்கெட், தீக்ஷனா 2 விக்கெட், லஹிரு குமாரா மற்றும் பெர்னாண்டோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
» 374 சர்வதேச போட்டிகள்... 17,253 ரன்கள்... - ‘இந்திய அணியின் பயமறியான்’ சேவாக் பிறந்தநாள் பகிர்வு
» T20 WC | அஃப்ரிடி வீசிய யார்க்கர்; ஆப்கன் வீரரின் பாதத்தை பதம் பார்த்த பந்து
குரூப் ஏ-வில் இலங்கை முதலிடமா, இரண்டாவது இடமா? - குரூப் ஏ-வில் இலங்கை, நெதர்லாந்து, நமீபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என நான்கு அணிகள் உள்ளன. இதில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தலா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் இலங்கை இப்போது முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
நமீபியா அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இன்று அமீரகத்துடன் அந்த அணி பலப்பரீட்சை மேற்கொண்டு வருகிறது. இதில் வெற்றி பெற்றால் அந்த அணி ரன் ரேட் அடிப்படையில் இந்தப் பிரிவில் முதலிடம் பிடிக்கும். அதன் காரணமாக இலங்கை அணி இரண்டாம் இடம் செல்லும். இந்தப் பிரிவில் இரண்டாம் இடம்பிடிக்கும் அணி சூப்பர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் குரூப் பி சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் விளையாட வேண்டும்.
நமீபியா இன்றைய போட்டியில் தோல்வியைத் தழுவினால் இலங்கை முதலிடம் பிடிக்கும். நெதர்லாந்து அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago