T20 WC | கார்த்திக் மெய்யப்பனின் ‘ஹாட்ரிக்’ வீணானது - இலங்கையிடம் வீழ்ந்தது ஐக்கிய அரபு அமீரகம்

By செய்திப்பிரிவு

ஜீலாங்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தின் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். ஆனால் அவரது சாதனை பலன் கிடைக்காமல் போனது. இந்த ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் வீழ்ந்தது.

ஜீலாங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 60 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது.

இந்த ஓவரை வீசிய கார்த்திக் மெய்யப்பன் கடைசி 3 பந்துகளிலும் பனுகா ராஜபக்ச (5), சாரித் அசலங்க (0), கேப்டன் தசன் சனகா (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்துஹாட்ரிக் சாதனை படைத்தார். டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இது ஐந்தாவது ஹாட்ரிக் ஆகும். அதேவேளையில் எந்தவொரு சர்வதேச டி 20 போட்டியிலும் ஐக்கிய அரபு அமீரக அணியைச் சேர்ந்த வீரர் கைப்பற்றிய முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும்.

முன்னதாக குசால் மெண்டிஸ் 18, தனஞ்ஜெயா டி சில்வா 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். பதும் நிசங்கா சீராக ரன்கள் சேர்த்ததால் இலங்கை அணியால் சற்று வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது. ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் கார்த்திக் மெய்யப்பன் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

153 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 17.1 ஓவரில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அயன்அஃப்சல் கான் 19, ஜூனைத் சித்திக் 18, ஷிராக் சூரி 14 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினர். இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிளை பெற்றது.

சென்னையில் பிறந்தவர்..

22 வயதான கார்த்திக் மெய்யப்பன் இந்திய வம்சாவளி வீரர். கடந்த 2000-ம் ஆண்டு, அக்டோபர் 8-ல் சென்னையில் பிறந்துள்ளார். 2012-ம் ஆண்டு கார்த்திக் மெய்யப்பன் குடும்பத்தினர் துபாயில் நிரந்தரமாக குடியேறி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்