எயிம்செஸ் ரேபிட் செஸ் - கார்ல்சனை சாய்த்தார் குகேஷ்

By செய்திப்பிரிவு

சென்னை: எயிம்செஸ் ரேபிட் செஸ் போட்டியில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ்.

இணையதளம் வாயிலாக நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 9-வது சுற்றில் உலக சாம்பியனான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார் இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 29-வது நகர்த்தலின் போது கார்ல்சனை தோற்கடித்தார். இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் குகேஷ்.

குகேஷுக்கு 16 வயது 4 மாதங்கள் 20 நாட்கள் ஆகிறது. இந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் 16 வயது 6 மாதங்கள் 10 நாட்களான மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். இந்தத் தொடரில் இந்திய வீரரிடம் கார்ல்சன் தோல்வியடைவது இது 2-வது முறையாகும். கார்ல்சன் தனது 8-வது சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசியிடமும் வீழ்ந்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்