டி20 உலக கோப்பை | இறுதிவரை போராடிய யுஏஇ - 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி

By செய்திப்பிரிவு

மெல்போர்ன்: டி20 உலக்கோப்பையின் இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் குவித்தார்.

7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது. அதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக 18-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பாஸ் தி லீடே 3 விக்கெட்டுகளையும், ஃபிரட் க்ளாஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங், மேக்ஸோ இணை துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே விக்ரம்ஜித் சிங் 10 ரன்களுடன் வெளியேறினார். மேக்ஸோ தோவுத் 23 ரன்களிலும், பாஸ் டி லீடே 14 ரன்களிலும், கொலின் அக்கர்மேன் 17 ரன்களிலும் அவுட்டாக 12 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை சேர்த்திருந்தது நெதர்லாந்து அணி.

அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து 19.5 ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ஜூனைத் சித்திக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்