மொஹாலியில் சனிக்கிழமையன்று இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்தும், தொடர்ந்து நசுக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகின்றன.
பிட்ச் நிலவரம்:
பிட்ச் முழுதும் புற்கள் நீக்கப்பட்டு வழவழ தரையாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸை கருத்தில் கொண்டு முழுதும் புற்கள் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதில் ஒன்றுமில்லாதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மீண்டும் டாஸ் வெல்லும் அணிக்கு சாதக நிலை ஏற்படும் என்றே தெரிகிறது. மேலும் பந்துகள் மெதுவாகவே வரும், இதனால் ஸ்ட்ரோக் பிளேயும் கடினம்தான்.
எனவே டாஸ் வென்று முதலில் பேட் செய்வதில் விராட் கோலியை விடவும் அலஸ்டர் குக் அதிக நாட்டம் கொண்டுள்ளார். அதாவது முதலில் பேட் செய்து அதிக ரன்களை வைத்துக் கொண்டு இந்திய பேட்ஸ்மென்களை நெருக்கடிக்குள்ளாக்குவது என்ற திட்டம் குக்கினுடையது.
ஸ்டூவர்ட் பிராடிற்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ், பென் டக்கெட்டுக்குப் பதிலாக அதிரடி பேட்ஸ்மென் ஜோஸ் பட்லர், இடது கை ஸ்பின்னர் அன்சாரிக்குப் பதிலாக ஆஃப் ஸ்பின்னர் காரெத் பேட்டி ஆகியோர் அணியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய மாற்றமாக சஹா காயமடைந்த நிலையில் பார்த்திவ் படேல் சேர்ப்பு நிகழ்ந்துள்ளது. அவர் எப்படி ஆடுகிறார் என்பது அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
இந்தியாவின் அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆஃப் ஸ்பின்னர்கள் இங்கிலாந்தின் இடது கை பேட்ஸ்மென்களுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, அதோடு குக் விக்கெட்டை எடுக்கும் சாதுரியம் தெரிந்த ஜடேஜா இருக்கிறார். உமேஷ் யாதவ், மொகமது ஷமி அவ்வப்போது குறுகிய ஸ்பெல்களில் நல்ல வேகத்துடன் வீசி அசத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து அணியின் கவனம் முழுதும் புஜாரா, கோலியை கட்டுப்படுத்துவது, அஸ்வினை எதிர்கொள்வது என்பதாக இருக்கும்.
கடந்த நவம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இடப்பட்ட குழி பிட்சில் இந்தியா முதல் இன்னிங்சில் 201, இரண்டாவது இன்னிங்சில் 200 என்று குறைவாக எடுத்தாலும் டெஸ்ட் போட்டியை 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3 நாட்களுக்குள் குழிபிட்ச் வேலையைக் காட்ட தென் ஆப்பிரிக்கா மண்ணைக் கவ்வியது.
ஆனால் இங்கிலாந்து அணியில் மொயின் அலி, ரஷீத் ஆகியோர் சக்லைன் முஷ்டாக் மேற்பார்வையில் இந்தப் பிட்ச்களில் நன்றாக வீசிவருவதால் இம்முறை மொஹாலி பிட்ச் முழுதும் ‘ஷேவ்’ செய்யப்பட்டுள்ளது, அவ்வளவு ஸ்பின் ஆகாது, ஸ்பின் ஆனாலும் மெதுவாகவே ஆகும்.
இந்திய பேட்டிங்கைப் பொறுத்தவரை அஜிங்கிய ரஹானே இந்தத் தொடரில் ஆட்டமிழந்த விதம் அவரது தன்னம்பிக்கையையே குலைப்பதாகும். அவர் இம்முறை சதம் எடுக்க நிச்சயம் முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கலாம், அவரை எழும்ப விடாமல் இங்கிலாந்து நெருக்கடி கொடுக்கும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.
இன்னொரு விறுவிறுப்பான டெஸ்ட் போட்டி காத்திருக்கிறது. இந்திய அணியின் பந்து வீச்சில் உமேஷ் யாதவ்வுக்குப் பதிலாக இசாந்த் சர்மா அல்லது புவனேஷ் குமாரை சேர்க்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் பொதுவாக வெற்றிக்கூட்டணியை பிரிக்க மாட்டார்கள் என்பது இந்திய அணியின் ஐதிகம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago