ஜோகோவிச்சிற்கு ஆஸி. விசா கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: வழக்கறிஞர்

By செய்திப்பிரிவு

மெல்பேர்ன்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் ஜோகோவிச், ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்தால் அவருக்கு விசா கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மெல்பேர்னை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தொடர் 2023 ஜனவரி வாக்கில் நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அவர் ஆஸ்திரேலியா சென்ற நிலையில் விசா சிக்கல் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் ஜோகோவிச் வெளியேறி இருந்தார். அவருக்கு விசா மறுக்கப்பட்டதற்கான பிரதான காரணம் அவர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது தான். அது தொடர்பாக அவர் சட்டப் போராட்டம் நடத்தினார். இருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நாட்டின் தடுப்பூசி கொள்கை அப்படி இருந்தது. அது உலக அளவில் கவனம் பெற்றிருந்தது.

இதே தடுப்பூசி கொள்கை காரணமாக அவர் அமெரிக்க ஓபன் தொடரிலும் பங்கேற்று விளையாடவில்லை. கிராண்ட்ஸ்லாம் தொடர்களில், ஒற்றையர் பிரிவில் மட்டும் மொத்தம் 21 பட்டங்களை அவர் வென்றுள்ளார். இதில் 9 பட்டங்கள் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் வென்றது.

“அவரை மீண்டும் ஆஸ்திரேலியாவில் அனுமதிப்பதில் எந்த ஆபத்தும் இல்லை. அவர் இங்குள்ள சமூகத்தினருக்கு எந்தவிதமான தொந்தரவும் செய்யப்போவதில்லை. அவர் டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீரர். முக்கியமாக அவர் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவது வெளிநாட்டு பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கும்” என வழக்கறிஞர் கோன்-மிங் சாய் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்