ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ஆல்ரவுண்டரான மார்கோ ஜேன்சன் சேர்க்கப்பட்டுள்ளார். டி 20 உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ஏற்கெனவே இடம் பெற்றிருந்த ஆல்ரவுண்டரான டுவைன் பிரிட்டோயஸ், சமீபத்தில் முடிவடைந்த இந்தியாவுக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடரின் போதுகாயம் அடைந்தார். அவரதுஇடது கட்டைவிரலில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்தும், டி 20 உலகக் கோப்பையில் இருந்தும் விலகியிருந்தார்.
இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் டுவைன் பிரிட்டோரியஸுக்கு மாற்றாக இடது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மார்கோ ஜேன்சன் சேர்க்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 22 வயதான மார்கோ ஜேன்சன் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அதுவும் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றிருந்தார். இருப்பினும், தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் கடந்த 12 மாதங்களாக தொடர்ந்து இடம் பெற்று வந்துள்ளார் மார்கோ ஜேன்சன். பிரதான அணியில் மார்கோ ஜேன்சன் இடம் பெற்றதை தொடர்ந்து மாற்று வீரர்கள் பட்டியலில் அவருக்கு பதிலாக லிசாட் வில்லியம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago