எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தீபக் சஹார் வெளியேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு மாற்றாக இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் இணைவார் எனத் தெரிகிறது. மேலும், சிராஜ் மற்றும் ஷமி என இரண்டு பவுலர்களும் இந்திய அணியில் இணையவுள்ளனர்.
ஆஸ்திரேலிய நாட்டில் வரும் 16-ம் தேதி தொடங்கி நவம்பர் 13 வரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி முன்னரே அறிவிக்கப்பட்டது. அணியில் இடம்பெற்றிருந்த பிரதான பவுலரான பும்ரா, காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இந்த சூழலில்தான் சிராஜ், ஷமி மற்றும் தாக்கூர் ஆஸ்திரேலியா புறப்பட உள்ளனர் என்ற தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷமி, ஷ்ரேயஸ் மற்றும் தீபக் சஹார் என மூவரும் அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம்பெற்றிருந்தனர். இதில் சஹார் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறி உள்ளார். அவருக்கு மாற்றாக தாக்கூர் இணைவார் என தெரிகிறது. பும்ராவுக்கு மாற்றாக ஷமி விளையாட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது. இருந்தாலும் அதனை பிசிசிஐ அறிவிக்க வேண்டும். ஏனெனில் சிராஜ் அபாரமாக பந்து வீசி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 23-ம் தேதி இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
» நெல்லின் ஈரப்பத அளவு | தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago