மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

By செய்திப்பிரிவு

சில்ஹெட்: மகளிர் ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 55, ஸ்மிருதி மந்தனா 47, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்கள் சேர்த்தனர். 160 ரன்கள் இலக்குடன் செய்த வங்கதேச மகளிர் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 100 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக நிகர் சுல்தானா 36, ஃபர்கானா ஹோக் 30, முர்ஷிதா கதுன் 21 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. தீப்தி சர்மா, ஷபாலி வர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய மகளிர் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்