அணியில் அனைவரும் தோனியை மிஸ் செய்கிறோம் - ஷர்துல் தாகூர்

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கவுள்ளது. போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், தோனியை மிஸ் செய்வதாக தெரிவித்தார்.

அதில், "இங்கே அனைவரும் தோனியை மிஸ் செய்கிறார்கள். காரணம், அவரின் அனுபவம். 300க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் என தோனியின் அனுபவம் முக்கியமானது. அவரை போன்ற ஒரு வீரரை சந்திப்பது அரிது" என்று பாராட்டி பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஷர்துல், "இப்போது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். டெயிலன்டர்களாக இறங்கும் பந்துவீச்சாளர்கள் அணிக்கு ரன் பங்களிப்பு தருவது பயன் அளிக்கக்கூடிய காரியம். அதை செய்ய விரும்புகிறேன்.

உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரருக்கும் பெரிய கனவு. இம்முறை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்து இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று அதற்கேற்ப தயாராகிவருகிறேன்" என்று பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்