செங்டூ: உலக டீம் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்திய ஆடவர் அணி வெளியேறி உள்ளது. காலிறுதி சுற்றுக்கு முந்தையச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி, சீன அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. அதன் மூலம் இந்திய அணி இத்தொடரில் இருந்து வெளியே வந்துள்ளது.
இந்தத் தொடரில் மொத்தம் 36 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. சீனாவில் உள்ள செங்டூ பகுதியில் இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது. 32 ஆடவர் அணி மற்றும் 28 மகளிர் அணி இதில் அடங்கும். குரூப் சுற்று மற்றும் நாக்-அவுட் என இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி குரூப் 2-வில் இடம்பெற்றிருந்தது. 3 வெற்றி மற்றும் 1 தோல்வி என அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. அந்தச் சுற்றில்தான் சீனாவை எதிர்கொண்டது இந்தியா.
இந்தச் சுற்றில் 3-0 என்ற கணக்கில் சீன அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஹர்மீத் தேசாய், ஜி.சத்யன் மற்றும் மனுஷ் ஷா என மூவரும் அடுத்தடுத்து தங்களது ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினர்.
» இலக்கிய நோபல் பரிசுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் தேர்வு
» ‘ஆதிபுருஷ்’ படத்தை தடை செய்க: அயோத்தி ராமர் கோயில் தலைமை புரோகிதர் வலியுறுத்தல்
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் கடந்த 2004 முதல் சீன அணி சாம்பியன் பட்டம் வென்று வருகிறது. அந்த ஆதிக்கத்தை நடப்பு தொடரிலும் அந்த அணி தொடர செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago